• Sep 17 2024

தனுஷ் படத்திற்காக ஏஆர் ரகுமான் போட்ட கானா பாடல்.. குதித்து ஆடும் ரசிகர்கள்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்த 'ராயன்’ திரைப்படம் வரும் ஜூன் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த பாடல் சற்றுமுன் வெளியாகிய நிலையில் முதல் முறையாக ஏஆர் ரகுமான் இசையில் ஒரு கானா பாடலை கேட்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். 

ஏ ஆர் ரகுமான் கம்போஸ் செய்த இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகிய இருவரும் பாடியுள்ள நிலையில் இந்த பாடல் முதல் முறை கேட்கும் போது ஆட்டம் போட வைக்கும் வகையில் இருப்பதாகவும் இந்த பாடல் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தனுஷின் ஐம்பதாவது படம் என்ற பெருமையை பெற்றுள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்றும் இதுவரை தமிழில் வெளியாகாத வித்தியாசமான கதை அம்சம் கொண்டது என்றும் கூறப்பட்டு வருகிறது. 

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். 

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ள இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



Advertisement

Advertisement