• Jan 18 2025

படத்தில் இடமில்லை என்றாலும் நட்பில் இடமுண்டு.. ’கேங்ஸ்டர் கூட்டணி’யில் ரத்னகுமார்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களில் திரைக்கதை எழுதும் பணியில் உதவியாளராக இருந்த இயக்குனர் ரத்னகுமார் அவர் இயக்கும் அடுத்த படமான ’கூலி’ படத்தில் மட்டும் இல்லை என்பதும் அதற்கு என்ன காரணம் என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ‘கூலி’ படத்தில் இடமில்லை என்றாலும் நட்பில் இடம் உண்டு என்ற வகையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ’ படத்தின் வெற்றி விழாவில் ரத்னகுமார் பேசியபோது ’கழுகு எவ்வளவு தான் உயர பறந்தாலும் இரை தேட கீழே வந்து தான் ஆக வேண்டும்’ என்று ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசினார். இது சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் லோகேஷ் - ரஜினி இணையும் ‘கூலி’ படத்தில் ரத்னகுமார் பணிபுரிய மாட்டார் என்று கூறப்பட்டது. அதன்படியே லோகேஷ் கனகராஜ் ரத்னகுமாருக்கு பதிலாக வேறு ஒருவரை தனது திரைக்கதை உதவியாளராக நியமனம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் தான் ’கூலி’ படத்தில் ரத்னகுமாருக்கு பதிலாக இடம் கொடுக்கவில்லை என்றாலும் அவரது நட்பு வட்டத்தில் இன்னும் ரத்னகுமார் இருப்பதாக தெரிகிறது. தனது நண்பர்களுடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு லோகேஷ் சென்ற போது அவருடன் ரத்னகுமார் சென்று உள்ளார் என்பதும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் எடுத்த புகைப்படங்களை ரத்னகுமார் தனது சமூக வலைதளத்தில் பல பதிவு செய்து ’கேங்ஸ்டர் கூட்டணி’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே ’ஆடை’ உள்ளிட்ட சில படங்களை இயக்கிய ரத்னகுமார் அடுத்து எல்சியு குறும்படத்தை இயக்க இருப்பதாகவும் அதை லோகேஷ் கனகராஜ் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த குறும்பட படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது.


Advertisement

Advertisement