• Jan 15 2025

நடிகை சித்ராவைப்போல் அவரது தந்தையும் உயிரிழப்பு! அதிர்ச்சியில் உறவுகள்

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நடிகை சித்ராவின் மறைவின் பின்னர் தற்போது அவரின் தந்தை சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


நடிகை சித்ரா கடந்த 2020 ஆண்டு நட்சத்திர விடுதியில் பிணமாக மீட்கப்பட்டார். இவரின் மரணம் திரையுலகில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.  இந்த வழக்கின் விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்நிலையில் தந்தையின் மரணம் ரசிகர்களிடத்தே அதிர்ச்சியையும் சோகத்தினையும் ஏற்படுத்தி உள்ளது.


நடிகை சித்ராவின் தந்தையும் ஓய்வுபெற்ற காவலருமான காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள  அவரது வீட்டின் அறை கதவு நீண்ட நேரமாக திறக்கமால் இருந்ததால், கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது காமராஜ் தூக்கில் சடலமாக தொங்கினார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலிசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மரணத்திற்கான காரணம் குறித்து திருவான்மியூர் போலீசார் விசாரணை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement