சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜ் வீட்டுக்கு செல்லாமல் ஷோரூம்லையே இருக்கின்றார். இதனால் முத்து, மனோஜ் பசி தாங்க மாட்டான் என்று அவருக்கு பிரியாணி வாங்கிக் கொண்டு போய் கொடுக்கின்றார். இதன்போது பிரியாணியை நன்றாக சாப்பிட்டுவிட்டு அதற்குப் பிறகு, இது அப்பா தந்த காசு அதனால் ஷேர் வாங்கலாம் என்று நினைக்காதே என்று சொல்லுகின்றார்.
இதை கேட்ட முத்து நீ பசியில் இருப்பா என்று தான் சாப்பாட்டை கொண்டு வந்தேன். ஆனால் உன்ட புத்தியை காட்டிட்டா.. நான் உன்ன அண்ணனா தான் நினைக்கிறேன்.. ஆனா நீ என்ன தம்பியா நினைச்சதே இல்லை என்று பேசிவிட்டு செல்கின்றார்.
இன்னொரு பக்கம் ரோகினியும் சாப்பிடாமல் இருக்க, மீனா அவருடைய ரூமுக்கு சென்று சாப்பாடு கொடுக்கிறார். இதன் போது ரோகிணியும் உங்களுக்கு நல்ல சந்தோஷமா இருக்கும் என என்று மீனாவுக்கு பேச, மீனா கோவத்தில் இப்படி எல்லாம் உங்களால மட்டும் தான் யோசிக்க முடியும். எனக்கு இதுவும் வேணும் என்று ரோகினிக்கு திட்டிவிட்டு செல்லுகின்றார்.
இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்து முத்து தனது செருப்பை கழட்டி மீனாவிடம் அடிக்குமாறு சொல்லுகிறார். மீனா ஏனென்று கேட்க, மனோஜ் செய்த காரியத்தை சொல்லுகின்றார். அதற்கு மீனாவும் எனக்கு நீங்க முதலில் செருப்பால் அடியுங்கள் என்று அவரும் சொல்லுகின்றார். முத்து காரணம் கேட்க, ரோகினி செய்த விஷயத்தை சொல்லுகின்றார். இதனால் நாம இனி யாரைப் பத்தியும் கவலைப்பட கூடாது என்று முடிவெடுக்கின்றார்கள்.
இறுதியில் மீனா தனது அம்மா, சீதாவை சந்தித்து வீட்டில் நடந்த விஷயத்தை சொல்லுகின்றார். இதன் போது சத்தியா ரோகினி சிட்டியிடம் வந்து பணம் வாங்கிய விஷயத்தையும் சொல்லுகின்றார். இதைக் கேட்ட மீனாவுக்கு ரோகினி மீது சந்தேகம் அதிகரிக்கின்றது.
Listen News!