• Mar 02 2024

தமிழர்கள் பிச்சைக்காரனுங்க... என்ற நடிகை லால் சலாம் பட ஹீரோயினாம்! விரட்டப்பட்ட நடிகர் சித்தாத்?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தான் நடிகர் சித்தாத். இவர் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து ஜிகர்தண்டா, காதலில் சொதப்புவது எப்படி, அருவம், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்து, இறுதியாக சித்தா என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இந்த படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியிட அதற்கான ப்ரோமோஷன்களில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ஹீரோ என்ற முறையில் சித்தாத்தும் பெங்களூர் சென்று இருந்தார்.

அதன்படி, சித்தா படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் சித்தாத் கர்நாடகா சென்றிருந்த நிலையில், அவருக்கு காவேரி பிரச்சினை காட்டி அங்கிருந்து கன்னட அமைப்பு வெளியேற்றி இருந்துள்ளனர்.

அப்போது இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.


இது ஒரு பக்கம் இருக்க சாதாரண ஒரு கிரிக்கெட் விளையாட்டு போட்டி அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்,  பெங்களூர் அணி தோல்வி அடைந்தது. 

இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத பிரபல கன்னட நடிகை தனியா பாலகிருஷ்ணா, தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்ற அளவிற்கு எள்ளி  நகையாடி  இருந்தார்.

அதாவது, தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்ரமித்து அந்த ஊரை கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால்.... தருகிறோம். இவருக்கு எதிராக HateDhanya எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டிங் ஆனதால், கடுப்பான இவர் 'இனி தமிழ்ப்படங்களில் நடிக்கவே மாட்டேன்' என சபதம் போட்டு இருந்தார்.

இந்த நிலையில்,  தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் இவர் தான் ஹீரோயினாக நடிக்கிறாராம்.

இவ்வாறு காரணமே இல்லாமல் கன்னட அமைப்பினர் சித்தார்த்தை பிரமோஷன் செய்ய விடாமல் தடுத்தனர். அவருடைய தமிழ் படங்கள் வெளியிடாமல் திரையரங்களுக்கு பூட்டும் போட்டனர்.

ஆனால் இங்கே தமிழர்களை பிச்சைக்காரர் என்று கூறிய தன்யா பாலகிருஷ்ணா ஹீரோயினாக நடித்திருக்க கூடிய படம் தான் சூப்பர் ஸ்டாரின் லால் சலாம்.

இந்தப் படத்திற்கு தமிழர்களின் என்ன ரியாக்ஷன் கொடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வி பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது.

இறுதியாக, நடிகர் சித்தார்தை கன்னட அமைப்பினர் விரட்டிய நிலையில், அதே இடத்தைச் சேர்ந்த ஹீரோயினால் தமிழர்களை இழிவாக பேசிய நடிகை தன்யா, தற்போது யலால் சலாம் படத்தில் நடித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement