• Oct 30 2025

ஜிம்மில் கிளீனர் வேலை செய்த இளைஞருக்கு KPY பாலா கொடுத்த இன்ப அதிர்ச்சி.! நெகிழ்ச்சி வீடியோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் KPY பாலா.  இவர் குக் வித் கோமாளி மூலம் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்பு இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவானது.

சினிமாத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற இலக்கோடு காலடி எடுத்து  வைத்தவர்களுள் ஒருவர் தான் KPY பாலா.  அதேபோல இவருக்கு சிறந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது விஜய் டிவி.  தனது திறமையின் மூலம் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு சென்றார் பாலா. தற்போது படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கும் தயாராக உள்ளார்.


இன்னொரு பக்கம் மக்களுக்கு உதவி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராகவும் காணப்படுகின்றார்.  அதன்படி வறுமையில் வாழ்பவர்களுக்கு மட்டும் இல்லாமல் மாற்றுத்திறனாளிகள், பெண்கள், இளைஞர்கள் என்று எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றார்.

பாலாவின் இந்த உதவிகள் சமூக வலைத்தள பக்கங்களில் வைரலான போது இதை பார்த்த ராகவா லாரன்ஸ் பாலாவுடன் கைகோர்த்தார்.  அதன் பின்பு இருவரும் ஒன்றாகவே மக்களுக்கு பல நன்கொடைகளை செய்து வருகின்றனர்.


இந்த நிலையில், தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஜிம்மில் கிளீனர் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவருக்கு ஐஸ்கிரீம் மற்றும் ஜூஸ் விற்கும் மார்டன் டிரக் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் பாலா. 

மேலும் குறித்த ஷாப்பிற்கு ரமேஷ் ஷாப் என்ற பெயரும் வைத்துள்ளார்.  அது மட்டும் இல்லாமல் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் திருஷ்டியும் சுத்திப் போட்டு உள்ளார். தற்போது குறித்த வீடியோ இணையதள பக்கத்தில் வைரலாகி வருவதோடு வழமை போலவே பாலாவின் நற்செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement