• Aug 16 2025

இட்லி கடை வெந்துடும்; ஒரே ஒரு போஸ்டரில் தனுஷின் காதலை காலி செய்த பார்த்திபன்

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர்  பார்த்திபன்.  இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதும் சினிமாவில் தொடர்ந்து பயணித்து வருகின்றார்.

பார்த்திபன் இயக்கத்தில் இறுதியாக  டீன்ஸ் படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் வனிதாவின் மகள் ஜோவிகா உட்பட பதினாறு குழந்தைகள் நடித்திருந்தனர். அதில் பார்த்திபனும் நடித்திருந்தார். அமானுஷ்யம் நிறைந்த காட்சிகளுடன் இயக்கப்பட்ட டீன்ஸ் படம் வெற்றியும் பெற்றது.

இதைத் தொடர்ந்து இட்லி கடை படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து வருகின்றார் பார்த்திபன். இந்த படத்தை தனுஷ் இயக்கி நடிக்கின்றார்.  சமீப காலமாகவே தனுஷ் பற்றி பல  கிசு கிசு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிலும் மிருணாள் தாகூருடன் காதல் கல்யாணம் என்று கூறப்பட்டது. ஆனாலும் இதனை மிருணாள் மறுத்திருந்தார்.


இந்த நிலையில், நடிகர் பார்த்திபன் அதனை கிண்டல் செய்யும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.  அதில் அவர் கூறுகையில், இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய ‘ஆடுகளத்தில் நான் நடிக்க முடியாமல் போனதும், இணைந்து நடித்த ‘ சூதாடி’ இடையில் நின்று போனதும், இவையாவையும் ஈடு கட்டும் விதமாக ‘ இட்லி கடை’யில் ஒரு சிறு மினி இட்லியாக கௌரவ வேடத்தில் நடிக்க அவரே அழைத்த போது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன். நேற்று டப்பிங் நிறைவு பெற்றது.


இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு, எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, சகலகலா வல்லவனாக, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிரினால் (மிருனாள் எனத் தவறாக வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ஏனெனில் அது தான் பிசுபிசுத்த கிசுகிசுவாய் போய் விட்டதே)அது ஆச்சர்யமில்லை என்பதை கண் கூடாகக் கண்டேன் இட்லி கடையில் . அக்டோபரில் வெந்து விடும் sorry வந்து விடும்!!!  என்று தெரிவித்துள்ளார்.

குறித்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் இருந்தாலும் பார்த்திபனுக்கு கிண்டல் அதிகம் என தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement