• Jan 19 2025

பள்ளியில் படிக்கும் போதே காதல் வயப்பட்ட அம்மு அபிராமி- கடைசியில் நடந்த டுவிஸ்ட்- பெற்றோர் எடுத்த முடிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் அம்மு அபிராமி.இவர் நடிகர் விஷ்ணு விஷால் படத்தில் பள்ளி மாணவியாக அம்மு என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனை அடுத்து இவருக்கு படவாய்ப்புக்களும் குவிய ஆரம்பித்தது.

தொடர்ந்து தனுஷீடன் இணைந்து அசுரன் திரைப்படத்திலும் நடித்தார். இதன் பின்னர் சில படங்களில் நடித்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி என்னும் ரியாலிட்ரி ஷோவிலும் பங்குபற்றி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.


தற்போது கண்ணகி என்ற படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக அவர் நடித்து இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் வெளியானது. இந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டியில்,தான் பள்ளி 10ம் வகுப்பு படிக்கும்போதே காதலித்து வீட்டில் மாட்டிக்கொண்டதாக கூறி இருக்கிறார்.

அது ஒன் சைடு லவ் தான், அதை மறைக்க கூட முடியாமல் வீட்டில் மாட்டி அடிவாங்கி இருக்கிறேன். அதை எப்போதும் மறக்க முடியாது என அம்மு அபிராமி கூறி இருக்கிறார்.


மேலும் வரும் கணவர் தன்னை புரிந்துகொள்பவராக இருந்தால் போதும், அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி, வீட்டில் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணமாக இருந்தாலும் சரி என அம்மு அபிராமி கூறி இருக்கிறார்.

Advertisement

Advertisement