• Jan 18 2025

களவாணி படத்தில் மாஸ் காட்டிய KGF ராக்கி பாய்.. இதை கவனிச்சீங்களா? வைரல் போட்டோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

கன்னடத்திரை  உலகை புரட்டி போட்ட திரைப்படம் என்றால் அது யாஷ் நடித்த கே ஜி எஃப் திரைப்படம் தான். அதற்கு முதல் வெளியான படங்கள் பெரும்பாலும் ரசிகர்களை கவராத நிலையில் கன்னட சினிமாவை உலகறிய செய்த படம் கேஜிஎப் படம் தான். இந்த படத்தை பிரசாந்த் நீல்  இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் ராக்கி பாய் என்ற மாஸான கேரக்டரில் நடிகர் யாஷ் நடித்திருந்தார். இந்த படத்தின் முதலாவது பாகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இதன் இரண்டாவது பாகமும் வெளியாகி அதிரடி ஹிட் அடித்தது.

வழக்கமாக படங்களின் இரண்டாவது பாகம் என்றாலே சொதப்பி விடும் என்ற பிம்பம் இருந்தது. அதனை கேஜிஎப் படம் முறியடித்து. 2022 ஆம் ஆண்டு வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டாவது பாகம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்த படம் சுமார் 1200 கோடிக்களை வசூலித்திருந்தது.


கே ஜி எஃப் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டு ஆண்டுகளாக எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார் யாஷ். அதன் பின்பு அண்மையில் அடுத்த படத்திற்கான ஷூட்டிங்கை தொடங்கினார். அதன்படி டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் கன்னட திரையுலகில் அசுர வளர்ச்சி கண்ட நடிகர் யாஷ், கே ஜி எஃப் படத்தில் நடிக்க முன்பு தமிழில் வெளியான களவாணி படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.


அதாவது தமிழில் வெளியாகி சக்கை போடு போட்ட காமெடி திரைப்படம் தான் களவாணி. இந்த படத்தின் கன்னட ரீமேக்கில் நடிகர் யாஷ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஓவியா நடித்துள்ளார். இந்த படம் கன்னடத்தில் கிராதகா  என்ற பெயரில் வெளியாகி உள்ளது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில்வைரலாகி உள்ளன.


Advertisement

Advertisement