• Jan 18 2025

பைத்தியக்காரன் மாதிரி தெருவுல நின்னேன்.. மகள் திரும்பவே இல்ல..! தாடி பாலாஜி உருக்கம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமானவர்தான் தாடி பாலாஜி. இவர் திரைப்படங்களில் மட்டுமில்லாமல் சின்ன திரையில் தொகுப்பாளராகவும் நடுவராகவும் காணப்பட்டுள்ளார்.

நடிகர் தாடி பாலாஜி நித்தியா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு போஷிக்கா என்ற மகளும் உள்ளார். ஆனாலும் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழுகின்றார்கள்.

பாலாஜி தன்னையும் மகளையும் குடித்துவிட்டு அடிப்பதாக நித்தியா குற்றச்சாட்டை முன் வைத்தார். மேலும் மகளை பயன்படுத்தி தன்னிடம் பணம் பறிக்க முயன்று வருவதாக தனது மனைவி மேலே குற்றம் சாட்டியிருந்தார் பாலாஜி.

இதை தொடர்ந்து விவாகரத்து பெரும்போது மகளின் படிப்பு செலவை தாடி பாலாஜி ஏற்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அவர் மகளின் படிப்பு செலவுக்கு பணம் தருவதில்லை என தாடி பாலாஜி மீது நித்யா குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.


இந்த நிலையில், நடிகர் தாடி பாலாஜி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஒரு சில விஷயங்களை வெளிப்படையாக கூறியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில், எனது மகளின் கல்வி கட்டணத்தை மூன்று வருடமாக கட்டி வருகின்றேன். அதற்கான ரசீது எல்லாம் என்னிடம் உள்ளது.

நித்தியா எனது மகளை கவனிப்பதே இல்லை. எப்போதும் பெங்களூர், ஹைதராபாத்தில் தான் இருக்காங்க. என் மகளை அவங்க அம்மா வீட்டுல விட்டுட்டு அடிக்கடி ஊருக்கு சென்று விடுகின்றார். 

தீபாவளிக்கு போஷிக்கா என் வீட்டுக்கு வந்ததும் இனிமேல் இங்கேயே இரு. இந்த வருஷம் பீஸ் கட்ட கொஞ்சம் லேட் ஆகிட்டு இன்னும் இரண்டு நாட்களில் கட்டி விடுகின்றேன் என்று சொன்னேன். அப்போது எனது மகளும் சரி என்று சொன்னார். அதற்குப் பிறகு நித்தியா என்ன சொன்னார் என்று தெரியவில்லை வீட்டுக்கு போய் நாய்க்கு சாப்பாடு வச்சிட்டு வாரேன்னு போன எனது மகள் திரும்பி வரவே இல்லை. ஃபோனையும் ஆஃப் பண்ணி வச்சுட்டா.

வீட்டுக்கு போனா வீடு பூட்டி இருக்குது. பைத்தியக்காரன் மாதிரி தெருவுல நின்னுட்டு இருந்தேன். பிறகு தான் போலீசுக்கு போன் பண்ணி பேசினேன். அதுக்குள்ள நித்தியா என் மேல் புகார் கொடுத்துட்டா.. என்ன பத்தி தப்பு தப்பா சொல்லி இருக்கா நித்தியா.

நித்தியா எங்க என்றாலும் போகட்டும் என்ன என்றாலும் பண்ணட்டும். ஆனா எனது மகள் வாழ்க்கை மட்டும் கெடுக்க வேண்டாம். ஒரு தகப்பனா என் மகளுக்கு செய்ய வேண்டியது நான் செய்வேன் என்று தாடி பாலாஜி நித்யாவின் புகாருக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement