• Jan 19 2025

கீர்த்தி பாண்டியன் வெளியிட்ட பதிவு... வைரலாகும் டுவிட் கிளிக்ஸ்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் தனது டுவிட்டரில் ஒரு பதிவை  முன்வைத்துள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது. 


திரையுலகில் இணைந்து நடிக்கும் நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்துகொள்வது சகஜமான ஒன்றாகவே இருந்து வருகின்றது. அந்த வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ள ஜோடி தான் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்.


அந்தவகையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வரும் அசோக் செல்வன் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாகிய அருண் பாண்டியன் மகளும், இளம் நடிகையுமான கீர்த்தி பாண்டியனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தத் திருமணம் இரு வீட்டார் முன்னிலையில் திருநெல்வேலியில் மிகவும் கோலாகலமாக நடந்தது.


இந்நிலையில் திருமணத்தைத் தொடர்ந்து இந்த புதுமணத் தம்பதிகள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பல சுவாரஷ்யமான விடயங்களை பகிர்ந்துள்ளனர். அதில் கீர்த்தி பாண்டியன் கூறுகையில் "திருமணத்தின்போது, மூன்று முடிச்சுகளும் நீயே போட வேண்டும்" என அசோக் செல்வனுக்கு அன்பு கட்டளையிட்டதாக தெரிவித்துள்ளார். இவர்களின் இந்தக் க்யூட் லவ் ஸ்டோரியை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


இந்நிலையில் நடிகை கீர்த்தி பாண்டியன் தனது டுவிட்டரில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement