• Jan 19 2025

ஈஸ்வரியின் டிராமாவால் வீட்டை விட்டு கிளம்பிய கமலா! ராதிகா எடுத்த முடிவு! பாக்கியாவுக்கு அதிர்ச்சி

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராதிகாவும் கோபியும் சண்டை போட்டுக் கொண்டு இருக்க, அங்கு வந்த கமலா நான் வீட்டை விட்டு போவதாக பெட்டியுடன் கிளம்புகிறார். ஆனாலும் எனக்கு என் அம்மா என்கூட தான் இருக்கனும்  என சொல்லி செல்கிறார் கோபி. ராதிகாவும் என்னை தனியா விட்டுட்டு போகாத என கமலாவிடம் சொல்லுகிறார்.

அதன்பிறகு, ஈஸ்வரியிடம் கோபி வந்து பாசமாக பேச,அவர் ராதிகா வீட்டை விட்டு போக சொல்கிறாரா? பக்கத்து ரூம்ல பேசுறது எனக்கு கேட்கும் தானே என சொல்லி வருத்தப்படுகிறார். ஆனாலும் உங்களை நான் பாத்துக் கொள்வேன் என சமாதானம் செய்கிறார் கோபி.

இதையடுத்து தரையில் படுத்ததால் கமலா கால் வலி என்று பேசிக் கொண்டு இருக்க, ராதிகா கமலாவையும் மையூவையும் தன்னுடன் படுக்குமாறும் கோபியை சோபாவில் தூங்குமாறு சொல்கிறார்.


இதை தொடர்ந்து பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு அருகில் பார் திறப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்க, செல்வியும் பாக்கியாவும் இதை பார்த்து டென்ஷன் ஆகிறார். அதன்போது பார் கடை ஓனர் பாக்கியாவின் கடைக்கு வர, அவரிடம் இங்க எல்லாரும் பெண்கள் தான் வேலை செய்கிறார்கள். இதனால் கொஞ்சம் பயமா இருக்கு உங்க கடையை வேற இடத்தில் வைக்க முடியதா என கேட்க, அப்படி என்றால் உங்க கடையை என்னிடம் தாங்க, நான் வியாபாரம் செய்றேன் என சொல்ல, பாக்கியா ஷாக் ஆகிறார்.

இறுதியாக வீட்டில் பாக்கியாவிடம் செல்வி, ஜெனியும் அமிர்தாவும் சரியா பேசிக் கொல்றது இல்லை. எதோ சரியில்லை கொஞ்சம் பாரு அக்கா என சொல்லி கிளம்ப, அங்கு வந்த அமிர்தாவிடம் இதை பற்றி கேட்கிறார் பாக்கியா. ஆனாலும் அமிர்தா, நான் தாத்தாக்கு சாப்பாடு கொடுக்கிறது அவங்களுக்கு பிடிக்கல. அதனால அவங்களே வேலை செய்யட்டும் என்று விட்டுட்டேன் என சொல்ல, ஜெனி இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலைக்கு வார, நிறைய விசயத்துல பாதிக்கப்பட்டுட்டா, நீ தான் கொஞ்சம் பொறுமையா போகணும் என சொல்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement