லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்று லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் முந்தைய படங்களின் கேரக்டர்களை கொண்டு வந்து அசத்தி வருகிறார் என்பதும் அதனால் தான் அவரது படங்களில் LCU காட்சிகள் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜை வெங்கட் பிரபு ஃபாலோ செய்கிறார் என்றும் அவரது ’மாநாடு’ படத்துடன் தற்போது இயக்கி வரும் ‘கோட்’ படத்தை கனெக்சன் செய்யும் முயற்சியில் அவர் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’மாநாடு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த பாண்டிச்சேரி விமான நிலையத்தில் தற்போது ‘கோட்’ படத்தின் சில காட்சிகளையும் படமாக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக பாண்டிச்சேரி அரசிடம் ‘கோட்’ படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றுள்ளதாகவும் பாண்டிச்சேரி விமான நிலையத்தில் மூன்று நாட்கள் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ’மாநாடு’ படப்பிடிப்பு நடந்த அதே இடத்தில் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பையும் வெங்கட் பிரபு நடப்பு திட்டமிட்டுள்ளதால் இரண்டு படத்திலும் உள்ள காட்சிகளை அவர் இணைக்க திட்டமிட்டிருப்பதாகவும் இதனை அடுத்து VCU என்ற வெங்கட் பிரபு சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்பதை அவர் ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் கண்டிப்பாக VCU காட்சிகளை ’கோட்’ படத்தில் எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
Listen News!