• Jan 19 2025

முத்து மீனாவை பிரிக்க பிளான் போட்ட ரோகிணி? நடுராத்திரியில் முற்றிய சண்டை!

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில், மனோஜ், ரோகிணிக்கு விஜயா ஆர்த்தி எடுக்க, வழமை போல முத்து காமெடி பண்ணுகிறார்.

அதற்குப் பிறகு மனோஜ் அசதியில் வந்து அப்படியே சோபாவில் தூங்க, எல்லாரும் ஒரு நாள் வேலைக்கு போனதுக்கே இப்படி என்றால் என்ன செய்வது என பேசிக்கொள்கின்றார்கள். அதுடன் நாமும் தினமும் வேலைக்கு போறோம் நாம பிடிச்சு தான் வேலை செய்கிறோம் அதனால் அசதி தெரியல என்று ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருக்க, இன்னைக்கு முதல் நாள் என்ற படியா அவருக்கு கொஞ்சம் வேலை கூட என்று சொல்லி ரோகினி சமாளித்து மனோஜை கூட்டிட்டு போகிறார்.


அதன்பிறகு மனோஜ் சாப்பிடவும் இல்லாமல் அசதியில் தூங்குகிறார். முத்து தூங்குவதற்காக பார்த்துக் கொண்டிருக்க ரோகிணி உள்ளே வந்து நாமே ஏன் ரூமலை விட்டுக் கொடுக்கணும் என்று இருக்கிறார். முத்துவும் வந்து கதவை தட்ட அவர் தூங்குகிறார் எழுப்ப முடியாது வேண்டுமென்றால் நீங்கள் மனோஜுடன் தூங்குங்க நான் மீனாவுடன் தூங்குகிறேன் என்று சொல்ல, அங்கு வந்த அண்ணாமலை இன்னைக்கு எங்க ரூம்ல தூங்கு என்று முத்துக்கு சொல்ல, வேணாம்பா உனக்கு டஸ்ட் ஒத்துக்காது நீ தூங்கு என மொட்டை மாடிக்கு சென்று முத்துவும் மீனாவும் தூங்கப் போகிறார்கள். இதன் போது முத்து மீனாவை இப்படி தூங்க வைக்கிறோமே என்று அவரிடம் கவலையாக பேசுகிறார். ஆனால் மீனா உங்க கூட இருக்கிறது எனக்கு சந்தோஷம் தான் என சொல்லுகிறார்.

இறுதியாக மறுநாள் காலையில் எல்லாரும் வேலைக்கு ரெடியாகிக்  கொண்டிருக்க மனோஜ் மட்டும் எழும்பவே இல்லை. விஜயா சென்று எல்கேஜி பிள்ளையை  எழுப்புவது போல மனோஜை எழுப்பிக் கொண்டிருக்க அவர் எழும்பாமல் நன்றாக தூங்கிக் கொண்டு இருக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்

Advertisement

Advertisement