• Nov 24 2025

நிக்சன் விவகாரத்தை கண்டுகொள்ளாத கமல்; அதே சம்பவத்திற்கு வேற லெவலில் செய்கை செய்த நாகர்ஜூனா! வீடியோ வைரல்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கியதில் இருந்து இம்முறையே நிறைய துஷ்பிரயேகமான வசனங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளது.  அதிலும் சக பெண் போட்டியாளர் வினுஷா தேவியின் உடலை மட்டமாக கலாய்த்தார் நிக்ஸன். இது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகி சர்ச்சையானது.

எனினும், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த வினுஷா அளித்த பேட்டியில் நிக்ஸன் செய்தது தவறு. அவர் என்னை பேசியது எதுவுமே எனக்கு தெரியாது. சொல்லாமலே மன்னிப்பு கேட்டார். அப்படி அவர் இப்போது மன்னிப்பு கேட்டாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றார்.


இது தொடர்பில் கடந்த வாரம் நடந்த ஸ்டேட்மெண்ட் டாஸ்கில் இந்த டயலாக் சக போட்டியாளர்கள் முன் காட்டப்பட்டது. அதற்கு நிக்ஸன் இது சாதாரணமாக சொல்லப்பட்டது என கதை சொல்லி இருந்தார். அப்போது நிக்சனுக்கு மஞ்சள் கார்டு கொடுக்கப்படும் என பலரும் எதிர்பார்த்தனர்.எனினும் அது நடக்கவில்லை.

இந்நிலையில், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதே மாதிரி பெண் போட்டியாளர்களின் அங்கத்தினை கமெண்ட் செய்த போட்டியாளர் ஒருவரை நாகர்ஜூனா வெளுத்து வாங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.


அதன்படி, தெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்கும் நாகர்ஜூனா நிக்சனின் சம்பவம் போல தெலுங்கில் பெண் போட்டியாளரை அசிங்கமாக வர்ணித்து பேசியவரை சரமாரியாக திட்டி தீர்ப்பதாக அந்த வீடியோ அமைந்து இருக்கிறது. 

இதை பார்த்த தமிழ் ரசிகர்கள் கமலை அவரிடம் கற்றுக்கொள்ளுமாறு தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement