• Sep 09 2024

கமல், தனுஷை பங்கம் பண்ணி அந்தகன் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த பாசிட்டிவ் விமர்சனம்

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

தியாகராஜன் இயக்கத்தில் நடிகர் பிரசாத் நடித்த திரைப்படம் தான் அந்தகன்.  இந்த படத்தில் சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார், யோகி பாபு, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள்.

ஹிந்தி படமான அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பல போட்டிகளுக்கு மத்தியில் தியாகராஜன் வாங்கி இருந்தார். அதற்கு காரணம் தனது மகன் பிரசாந்தின் ஐம்பதாவது திரைப்படம் நல்ல வரவேற்பை பெறவேண்டும் என்பதுதான்.

ஹிந்தியில் வெளியான அந்தாதூன் திரைப்படம் கிட்டத்தட்ட நூறு கோடிகளை கடந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் தமிழ் ரீமேக் தான் தற்போது வெளியான அந்தகன் திரைப்படம்.

நேற்றைய தினம் உலக அளவில் வெளியான அந்தகன் திரைப்படம் கிட்டத்தட்ட 65 கோடிகள் வரை வசூலித்து உள்ளதாக  கூறப்படுகின்றது. ஆனாலும் இது தொடர்பான அதிகார்வபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

அந்தகன் திரைப்படம் வெளியாகி கலமையான விமர்சனம் பெற்றபோதும் எந்த குறைகளும் இதுவரையில் பெரிதாக பேசப்படவில்லை. இதற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் அதிக அளவில் குவிந்து வருகின்றது.


இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றே இட்டுள்ளார்.

அதில், அந்தகன் திரைப்படம் மக்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவை பெற்று வருகின்றது. வசூல் ரீதியான வெற்றியை எந்த அளவிற்கு பெரும் என்பது சில தினங்கள் கழித்து தான் தெரியும். சமீபத்தில் வெளியான இந்தியன் 2, ராயன் போன்ற படங்களை விட இது எவ்வளவோ மேல் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement