• Jan 21 2025

கோட் படத்திற்கு முன்பே அந்தகன் ரிலீஸாக இத்தனை காரணங்களா? தியாகராஜனின் மாஸ்டர் பிளான்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களில் தற்போது பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் படத்தின் விமர்சனங்கள் தான் படு வைரலாக  காணப்படுகின்றது. அத்தகன் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இந்த படத்தில் நடித்தவர்கள் கொடுத்த பேட்டிகள் தான் வைரலாகி வருகின்றன.

ஹிந்தியில் இருந்து ரீமேக் ஆகி தமிழுக்கு வந்திருந்தாலும் கூட எந்த இடத்திலும் இந்த திரைப்படம் கொஞ்சம் கூட தடயம் தெரியவில்லையாம். அதேபோல ஹீரோயினாக நடித்த பிரியா ஆனந்த் கூட கவர்ச்சியை காட்டாமல் அழகான மாடல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்து உள்ளாராம்.

பிரசாந்தின் ஐம்பதாவது படமான அந்தகன் படத்தில் அவருக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இன்னும் பல படங்களில் அடுத்தடுத்து வெவ்வேறு  இயக்குனர்களுடனும் இணைந்து தற்போது கிடைத்த வரவேற்பு தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் எதிர்பார்க்கின்றார்கள்.

இளைய தளபதி விஜய் நடிக்கும் கோட் படத்தில் அவருடன் கூட நடிக்கும் நாலு பேர்களில் ஒருவராக பிரசாந்தும் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு என்ன ரோல் என்பது தெரியாது.எனினும் அது முக்கியமான ரோலாக தான் இருக்கும். கதை அவரைச் சுற்றி நகர்வதாக தான் இருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

கோட் படம் ரிலீசானத்திற்கு பிறகு அந்தகன் படத்தை வெளியிட்டால் இப்போது கிடைத்த வரவேற்பை விட அதிகமாகவே வரவேற்பு கிடைத்திருக்கலாம். ஆனால் தியாகராஜன் ஏன் இந்த படத்தை முன்பே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பப்படுகின்றது.


ஆனால் கோர்ப்படத்தில் அவர் ஒரு வேலை வில்லனாக நடித்திருந்தால் ரசிகர்கள் அவரை அடுத்த படத்தில் ஹீரோ ரோலில் ஏற்பார்களா என்று சிந்தனை எழுந்திருக்கலாம். அது மட்டும் இல்லாமல் கோட் படத்தின் வெற்றியால்தான் அந்தப் படமும் ஓடுகின்றது என்று சொல்லலாம். ஆனால் தியாகராஜனை பொறுத்தவரை அந்தகன் படத்தின் திரைக்கதை நம்பித்தான் முன்பே ரிலீஸ் செய்துள்ளார். அதனால் தான் கோட் படத்திற்கு முன்பே இந்த படத்தை களம் இறக்கி உள்ளார்.

மேலும், பிரசாந்துக்கு இன்னும் நிறைய ரசிகர்கள் இருக்காங்க என்பதைக் காட்ட வேண்டும் என்ற ஒரு ஈகோ கூட அவருக்கு இருந்திருக்கலாம். எப்படி இருந்தாலும் அந்தகன் படத்தின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார் தியாகராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement