பிரபாஸ் நடித்த ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் முதல் நாளில் உலகம் முழுவதும் 180 கோடி ரூபாய் வசூல் ஆனதாக முதலில் செய்தி வெளியானது. ஆனால் அதனை மறுத்த தயாரிப்பாளர் தரப்பு முதல் நாளில் உலகம் முழுவதும் 191.50 கோடி ரூபாய் வசூல் ஆனதாக அதிகாரபூர்வமாக அறிவித்து அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டது.
இந்த நிலையில் முதல் நாளில் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கிய நிலையில் இரண்டாவது நாளில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல் நாளில் இந்த படத்திற்கு ஒரு சில பாசிட்டிவ் மட்டுமே வெளியான நிலையில் புளூ சட்டை மாறன் உள்பட பல விமர்சனங்கள் நெகட்டிவ்வாக வந்ததால் இந்த படத்தின் இரண்டாவது நாள் வசூல் மிகப்பெரிய அளவில் சரிந்து உள்ளது.
முதல் நாளில் இந்தியாவில் 95 கோடி ரூபாய் வசூல் ஆனதாக கூறப்பட்ட நிலையில் இரண்டாவது நாளில் வெறும் 50 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேறு எந்த பெரிய படமும் போட்டிக்கு இல்லாத நிலையிலும் கூட இரண்டாவது நாளில் வசூல் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதாகவும், ஆனால் அதே நேரத்தில் விடுமுறை தினங்களான சனி, ஞாயிறு தினங்களில் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஹாலிவுட் தரத்தில் படம் எடுத்திருக்கிறோம் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர், ஆனால் ஹாலிவுட் படங்களின் காப்பி என்பதை அவர்கள் சொல்லவில்லையே என்று தான் படம் பார்த்தவர்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
600 கோடி ரூபாய்க்கு மேல் பட்ஜெட்டில் உருவாகிய கல்கி 2898 ஏடி’ படம் முதல் இரண்டு நாளில் 200 கோடியை கூட தாண்டவில்லை என்பதால் அடுத்தடுத்த நாள்களில் வசூல் செய்து போட்ட முதலீட்டையாவது எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Listen News!