• Jan 19 2025

பிரதமருக்கே திருமண அழைப்பா? மாஸ் காட்டிய சரத்குமார் குடும்பம்! சரத்குமார் X தளத்தில் விளக்கம்!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

சினிமா பிரபலங்களின் திருமணங்கள் பரவலாக பேசப்படுவது போன்று அவர்களின் திருமணத்துக்கு வர இருக்கும் பிரபலங்களை பற்றியும் பரவலாக பேசப்படுகின்றது. அவ்வாறே நடிகரும் அரசியல் வாதியுமான சரத்குமார் தனது மகளின் திருமண வரவேற்ப்பு விழாவுக்கு குடும்பத்துடன் சென்று பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.


குறித்த புகைப்படங்களை தனது X தள பக்கத்தில் பதிவிட்டதுடன் " பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடிஜி அவர்களை இன்று காலை டெல்லியில் அமைந்துள்ள பாராளுமன்ற இல்லத்தில் குடும்பத்தினருடன் சென்று சந்தித்து பேசியதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 


நானும், எனது மனைவி திருமதி.ராதிகா சரத்குமார் அவர்களும் நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்து, இந்தியாவின் வரலாற்று சாதனையாக மூன்றாவது முறையாக பாரத பிரதமராக மோடிஜி அவர்கள் தேர்வானதற்கு வாழ்த்துகளை தெரிவித்து, சென்னையில் நடைபெறவுள்ள மகள் வரலஷ்மி - நிக்கோலை ஆகியோரின் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தோம். மேலும், நமது பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் கட்சி பணிகள், மக்கள் பணிகள் குறித்தும், தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடியதில் மகிழ்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்  

சரத்குமாரின் மகளான வரலட்சுமிக்கும் நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் இவர்களின் திருமணமானது தாய்லாந்தில் நடைபெற உள்ளதுடன் திருமண வரவேற்ப்பானது சென்னையிலும் நடைபெற உள்ளது. இதற்காவே பிரதமர் மோடிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தனர்.  



Advertisement

Advertisement