• Feb 05 2025

சும்மா நச்சுன்னு இருக்காங்களே..! பார்பி கேர்ள் ஆக இணையத்தை தெறிக்கவிட்ட தமன்னா..

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

இந்தி படத்தின் மூலம் நடிகை தமன்னா தனது திரையுலக வாழ்க்கையை  ஆரம்பித்தாலும் அவருக்கு நடிகை என்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது தமிழ் சினிமா தான். தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் கதாநாயகியாக வலம் வருகின்றார்.

தமன்னாவின் கால்ஷீட் இருந்தால் சொல்லுங்க படத்தின் பட்ஜெட் ஒரு பொருட்டே இல்லை என பல தயாரிப்பாளர்கள் போட்டி போடும் அளவுக்கு வெற்றி படங்களை கொடுத்து வருகின்றார். இவர் கிளாமராக மட்டுமில்லாமல் ஹோம்லியாகவும் நடித்து இன்றைக்கு இந்திய அளவிலேயே மோஸ்ட் வாண்டேட் ஆக்டராக உள்ளார்.

தமிழ் சினிமாவில் இறுதியாக தமன்னா நடிப்பில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் ஹோம்லியாக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் தமன்னா நடித்திருப்பார். இதில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கும் கிளாமராக தமன்னா குத்தாட்டமும் போட்டிருப்பார்.


15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் வலம் வரும் தமன்னா இதுவரையில் 85 படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே இரண்டு கோடியே 80 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்கின்றார்கள்.

இந்த நிலையில், நடிகை தமன்னா பிங்க் நிற ஆடையில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அதில் தமன்னா  பார்ப்பதற்கு பார்பி கேர்ள் போல காணப்படுகின்றார். தற்போது குறித்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement