தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இறுதியாக புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இருந்தாலும் எதிர்பாராத விதமாக சர்ச்சையை சந்தித்துள்ளது.
இந்த படம் வெளியாக முன்பு சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களுடன் சென்றிருந்தார். இதன் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளதுடன் அவருடைய மகனும் மூளைச்சாவடைந்தார். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாயையும் இழப்பீடாக கொடுத்தார் அல்லு அர்ஜுன்.
எனினும் உயிரிழந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்பு அடுத்தநாளே ஜாமினில் வெளியே வந்தார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண் தொடர்பான வழக்கில், இன்று காலை 11 மணிக்கு அல்லு அர்ஜுன் விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜராக உள்ளார்.
ஏற்கனவே அல்லு அர்ஜுன் ஜாமீனில் வெளியே சென்று இருந்தார். இதை தொடர்ந்து தான் 15 நாட்களாக வீட்டுக்குள் முடங்கி கிடப்பதாகவும் தன்னை பற்றி தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது இந்த வழக்கு தொடர்பில் அல்லு அர்ஜுன் ஆஜராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!