• Nov 14 2024

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்- எப்படி இருக்கு என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். 

இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி முடித்துள்ளார். இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடித்துள்ளார். 


மேலும் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் பைவ் ஸ்டார் கதிரேசனுடன் இணைந்து படத்தை தயாரித்துள்ளார். படம் தீபாவளியையொட்டி நவம்பர் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement