• Jan 19 2025

இடைவேளை விட்டது போல் சென்றுவிட்டார்! கிரேசி மோகன் நினைவு தினத்திற்கு கமல் இரங்கல்!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் பல சாதனையை செய்து விட்டு மறைந்து விடுகின்றனர். அவ்வாறே தமிழ் பல தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து பலர் மனதில் இடம் பிடித்த நடிகர் கிரேசி மோகனின் நினைவுதினத்திற்காக நடிகர் கமல் காசன் பதிவொன்றை போட்டுள்ளார்.


பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார்.அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றினார்.


இதற்காக கமல் தந்து X தலத்தில் குறிப்பிட்டுள்ளார். "எடுத்த வேலையை தனித்த தன்மையோடு வெற்றிகரமாக முடிப்பதே தன் திறனெனக் காட்டி வாழ்ந்த நண்பர் கிரேசி மோகனின் நினைவு நாள் இன்று. எத்தனையோ வேலைகளை இணைந்து செய்திருக்கிறோம். இடைவேளை விட்டது போல் எங்கேயோ போய்விட்டார். அவரது நினைவின் பக்கங்கள் என்னுள்ளே புரள்கின்றன."

Advertisement

Advertisement