• Jan 19 2025

சிம்பு நல்ல மனுஷன்.. ஆனா இப்படி இருக்காரே! அவங்க அம்மா, அப்பா தான்.. இயக்குனர் பாண்டியராஜ் பகிர்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிம்பு உலக நாயகன் கமலஹாசன் உடன் இணைந்து தக் லைஃப் படத்திலும் தனது 48வது படத்திலும் நடித்து வருகின்றார். சமீபத்தில் தக் லைஃப் படத்தில் இருந்து சிம்புவின் ட்ரெய்லர் ஒன்றும் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.

பத்து தல படத்திற்குப் பிறகு சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கும் எஸ்டிஆர் 48வது படத்திலும், மணிரத்தினம் இயக்கும் தக் லைஃப் படத்திலும் நடிக்கின்றார்.இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்று தரும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.

ஆனாலும் சிம்பு ஷூட்டிங்கிற்கு லேட்டாக தான் வருகிறார் என்ற குற்றச்சாட்டு அவரது இரண்டாவது இன்னிங்ஸில் உடைபட்டுள்ளது.


இந்த நிலையில், இது நம்ம ஆளு படத்தை இயக்கிய பாண்டியராஜ்  சமீபத்தில் அளித்த பேட்டியில் சிம்பு பற்றி குறிப்பிட்டுள்ளார். 

அதன்படி அவர் கூறுகையில், நான் சோம்பேறிகளுடன் சேர மாட்டேன். எனக்கு நான் இயக்கும் ஹீரோக்களுக்கும் இடையில்  நல்ல நட்பு இன்று வரை உள்ளது. வெளியில் இருந்து எனக்கும் சிம்புவுக்கும் பிரச்சினை என்று சொல்லுவார்கள். ஆனால் எனக்கு அவரால் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் அம்மா அப்பாவால்தான் பிரச்சனை வந்தது.

இது நம்ம ஆளு படத்தின் போது சிம்பு லேட் ஆகத்தான் வந்தார். ஆனால் எட்டு மணி நேர ஷூட்டிங்கை 5 மணி நேரத்தில் வைத்து முடித்து விடலாம். அவ்வளவு திறமையான நபர் சிம்பு. அவ்வளவு திறமையான ஆள் இப்படி இருக்கின்றார் என்று நான் வருத்தப்பட்டு இருக்கிறேன். கோவப்பட்டதில்லை அவரும் என்னைப் பற்றி பெருமையாக தான் பேசி இருக்கின்றார். இப்போதும் நாங்கள் நல்ல நட்புடன் தான் உள்ளோம் என தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement