• Jun 13 2026

எதிர்நீச்சல் சீரியலை முடித்த கையோடு இயக்குனர் வீட்டில் நடந்த விசேஷம்! கொண்டாடும் பிரபலங்கள்.. வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நன்கு படித்த சகோதரிகளின் பாசமும்,  வாழ்க்கையும் அவர்களை சுற்றி உள்ள ஆணாதிக்கத்தின் சூழ்ச்சியும் இறுதியில் அவர்கள் எவ்வாறு வெற்றி பெறுகிறார்கள் என்பதையுமே இந்த நாடகம் முக்கிய கருத்தாக கொண்டு நகர்ந்தது.

விஜய் டிவியின் சீரியல்களுக்கு டாப் கொடுத்த சீரியலாக திகழ்ந்து வந்த எதிர்நீச்சல் சீரியல், டிஆர்பி தர வரிசையிலும் முதல் இடத்தை பிடித்தது. இதில் நடித்து வந்த கேரக்டர்களில் மிக முக்கியமானவர் மாரிமுத்து. அவர் குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்தார். எனினும் அவர் உயிரிழந்த பிறகு தற்போது அந்த கேரக்டரில் வேலராமமூர்த்தி நடித்து வந்தார்.


எதிர்நீச்சல் தற்போது முடிவுக்கு வர உள்ளது என கூறப்படும் நிலையில், இயக்குனர் திருச்செல்வம் தனது மகள் பிரியாவின் திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி உள்ளார்.

தற்போது குறித்த புகைப்படங்களை சன் டிவியின் தொகுப்பாளரான அசார் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement