• Jan 19 2025

சிம்பு விஷயத்தில் பல்டி அடித்த ஐசரி கணேஷ்..? இதுக்கு பேசாமலே இருந்து இருக்கலாம்!

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த திரைப்படம் தான் மாநாடு. இந்த படம் சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதை அடுத்து கௌதம் மேனனின் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் சிம்பு நடித்திருந்தார். அந்தப் படமும் வெற்றி பெறும் என்று நினைப்பில் அதனை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார்.

மேலும் வேல்ஸ் நிறுவனத்திற்கு மூன்று படங்களில் நடித்து  தருவதாக சிம்பு உறுதி அளித்த நிலையில், கொரோனா குமார் படத்திலிருந்து அவர் விலகியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சிம்புவுக்கு ரெக்கார்ட் கொடுக்க வேண்டும் என்று ஐசரி கணேஷ் பரபரப்பு தகவல்களை முன் வைத்திருந்தார்.

அண்மையில் உலக நாயகன் கமலஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் சிம்பு நடித்துவரும் நிலையில், அதில் அவர் நடிக்கவே கூடாது அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஐசரி கணேஷ் பேட்டி கொடுத்திருந்தார்.


இந்த நிலையில், தற்போது நடைபெற்ற பிடி சார் ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில் தான் அப்படி கூறவில்லை என்றும் நடிகர் சிம்பு நடிக்கவே கூடாது என்று நான் கூறவில்லை, எனது படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு தக் லைஃப் படத்தில் நடிக்கட்டும் என்று தான் கோரிக்கை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

நடிகர் சிம்பு தற்போது தேசிங் பெரியசாமி இயக்கத்தில் எஸ் டி ஆர் 48வது படத்தில் நடிக்க போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. அதற்கு முதல்  தக் லைஃப் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதனை விரைவில் மணிரத்தினமும் முடித்து விடுவார்.

இவ்வாறான நிலையில் சிம்புவுக்கு எதிரான பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமாக தீர்த்து விடும் ஆலோசனைகள் இருப்பதாகவும் ஐசரி கணேஷ் மேலும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement