• Oct 13 2024

இதென்னடா வித்தியாசமான உருட்டா இருக்கு..? சிவகார்த்திகேயனை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக சிவகார்த்திகேயன் காணப்படுகின்றார். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் அயலான். இந்த திரைப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் வகையில் வேற்றுக் கிரகவாசிகளை வைத்து சுவாரசியமாக எடுக்கப்பட்டிருந்தது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக ஓரளவு வசூலித்திருந்தது

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன்- சாய்பல்லவி நடிப்பில் அமரன் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த திரைப்படம் உண்மையான மேயர் ஒருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அவருடைய புகைப்படமும் அவரின் காதலியின் புகைப்படமும் வெளி விடப்பட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாக இருந்தது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் பற்றிய கருத்து ஒன்றை கிண்டலடித்து பகிர்ந்து உள்ளார் ப்ளூ சட்டை மாறன். தற்போது குறித்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.


அதாவது தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவிலேயே புகைப்பிடிக்கும் காட்சிகளில் இன்று வரை நடிக்காத ஒரே இளம் நடிகர் சிவகார்த்திகேயன் மட்டும்தான். இவர் அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு என பிரபல சேனல் ஒன்று பதிவிட்டுள்ளது.

இதனை பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், இது என்னடா வித்தியாசமான உருட்டா இருக்கு? என சிவகார்த்திகேயனை கலாய்த்து உள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகின்றது.

Advertisement