• Oct 08 2024

என்னது அடுத்த தளபதி நானா? அமரன் பட மேடையில் எஸ்கே நச் ஸ்பீச்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  முன்னனி நடிகராக விஸ்வரூபம் எடுத்துள்ளவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் இறுதியாக விஜய் நடித்த கோட் படத்தில் கேமியா ரோலில் நடித்திருந்தார். இந்த காட்சி ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. அத்துடன் இளையதளபதி  சிவகார்த்திகேயனிடம் தனது பொறுப்பை ஒப்படைப்பது போல காட்டப்பட்டது.

தமிழ் சினிமாவில் நல்ல திரைப்படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் ஏற்கனவே ரங்கூன் என்ற வெற்றி படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை உலக நாயகன் கமலஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது. எதிர்வரும் அக்டோபர் 31ஆம் தேதி அமரன் திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. இதன் காரணத்தினால் படக் குழுவினர் தீவிரமாக பட ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு உள்ளார்கள்.

ஒரு சில தினங்களுக்கு முன்பு தான் மலேசியா நாட்டில் அமரன் திரைப்படத்திற்கான ப்ரொமோஷன் பணிகள் நடந்தது. இதன்போது ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன் உரையாடிக்கொண்டிருந்தார்.


இந்த நிலையில், ரசிகர் கூட்டத்தில் இருந்த ஒருவர் 'நீங்கள் தான் அடுத்த தளபதியா?' என்று கூட்டத்தில் இருந்து கேட்க, நிச்சயம் அப்படி கிடையாது. 

தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒரே ஒரு தளபதி தான். ஒரே ஒரு தல தான். ஒரே ஒரு உலக நாயகன் தான். ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான். அவர்களுடைய நடிப்பை பார்த்து சினிமா கற்றுக் கொண்டவன் நான். அவர்களைப் போல கடினமாக உழைத்து நல்ல திரைப்படங்களை கொடுக்க ஆசைப்படலாம். ஆனால் அவர்களாகவே நாம் ஆசைப்படுவது ரொம்பவும் தவறு என்று பதில் கொடுத்துள்ளார்.

Advertisement