• Jan 19 2025

சேசுவின் உடல்நிலை பின்னடைவா? சேசுவின் மகன் திடீர் பதிவு

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமில் சினிமாவில் மட்டுமின்றி, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சியிலும் கலக்கி வந்தவர் தான் நடிகர் சேசு.

அதாவது, லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் விதவிதமான தோற்றங்களில் வந்து வித்தியாசமான காமெடிகளை செய்து அனைவரையும் சிரிக்க வைத்து இருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன்னுடன் சக காமெடியனாக நடித்த சந்தானத்துடன் திரையுலகிலும் ஒரு சில படங்களில் இணைந்து நடித்திருந்தார்.

நடிகர் சேசுவுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், நடிகர் சேசுவின் உடல்நிலை குறித்து அவரின் மகன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் தந்தை உடல் நலம் தேறி வருகிறார். மருந்துகளும் நன்றாக வேலை செய்கிறது. மருத்துவர்களும் அவர் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறார், விரைவில் நலமுடன் திரும்புவார் என்று கூறியுள்ளார்கள். உங்கள் பிரார்த்தனைகளுக்கு மிகவும் நன்றி மேற்கண்ட தகவல்களை  விரைவில் வெளியிடுகிறேன் என பதிவிட்டு இருந்தார்.

இதே வேளை நடிகர் சேசுவுக்கு தேவையான மருத்துவச் செலவுகளுக்காக ஒரு பக்கம் நிதி திரட்டப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement