• Apr 01 2025

கமல் கட்சியில் இருந்து விலகிய முக்கிய பெண் நிர்வாகி.. ஒருசில மணி நேரத்தில் எடுத்த அதிரடி முடிவு..!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் தான் அனுஷாரவி. இவர் திடீரென்று அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதன்படி குறித்த அறிவிப்பில் அவர் கூறுகையில்,

அன்புக்குரிய தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு, அரசியலில் கடந்த மூன்று ஆண்டுகள் தங்களுடன் மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்து பயணிக்க வாய்த்தமைக்கும் கட்சியில் பொறுப்புக்கள் வழங்கியமைக்கும் நன்றி.


இந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் வழங்கிய பொறுப்புக்களை உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப மிக மிக சிறப்பாக செயல்படுத்தி உங்கள் பாராட்டை பெற்றதில் மகிழ்ச்சி. இருப்பிடம் தேர்தல் அரசியல் மையம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் மக்கள் நீதி மையம் கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து மிகுந்த மன வருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்.


இந்த நிலையில்,  கமல் கட்சியில் இருந்து விலகிய அனுஷா ரவி  ஒரு சில மணி நேரங்களில் பாஜகவில் இணைந்துள்ளார். சென்னையில்  உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அவர் தன்னை நினைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement