• Mar 29 2025

'சிறகடிக்க ஆசை’ மனோஜ்-க்கும், 'எதிர்நீச்சல்' நந்தினிக்கும் ஒரே நாளில் நடந்த விசேஷம்..! வைரல் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான டிவி சேனல்களாக விஜய் டிவியும், சன் டிவியும் காணப்படுகிறது.

இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், நிகழ்ச்சிகள் என்பவற்றுக்கு தனித்தனியாகவே ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் உண்டு. அது போலவே அதில் நடிக்கும்  பிரபலங்களுக்கும் தனி பேன்ஸ் பேஜ்  உண்டு.

சன் டிவி சீரியலில் டிஆர்பி ரேட்டிங் முன்னிலையில் இருந்து வந்த ஒரு சீரியல்தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் மாரிமுத்துவின் மறைவிற்கு பின்னர் சற்று சறுக்கி இருந்தாலும் அதன் பின்பு மீண்டும் எழுச்சி அடைந்துள்ளது.


எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினி கடத்தப்பட்ட சம்பவம், அதன் பின் அவர் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம், குணசேகரன் பற்றி குடும்பத்தார் அறிந்து கொண்ட விதம் ஆகியவை விறுவிறுப்பாக சீரியலை கொண்டு நகர்த்தியது.

அதுபோலவே விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் வகிக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கு பல இல்லத்தரசிகளை அடிமைகளாக காணப்படுகிறார்கள்.


தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியின் திருட்டு விடயங்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது. இதை அறிந்த  விஜயா கொந்தளித்து வருகிறார். இனிவரும் நாட்களில் இந்த சீரியலும் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நகரும் என்பதில் ஐயமில்லை.

இந்த நிலையில்,  சிறகடிக்க ஆசை சீரியல் நடிகருக்கும், எதிர்நீச்சல் நடிகைக்கும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி உள்ளது. குறித்த வீடியோக்கள் வருமாறு,




Advertisement

Advertisement