• Sep 04 2025

சாய் அபயங்கரை கம்பேர் பண்ண சொன்னேனு நிரூபித்தால் இசையை விட்டே போறேன்! – சாம் ஓபன்டாக்

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் இசையமைப்பாளர் சாம் C.S. பல திரைப்படங்களில் தனிப்பட்ட இசை ஸ்டைலையும், மெலடிக் மற்றும் மாஸ் பாணிகளையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியவர்.


இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட அவர், தன்னுடைய அனுபவங்கள், ரசிகர்களின்  மீம்ஸ், பெரிய தயாரிப்பாளர்களின் பார்வை, மற்றும் சாய் அபயங்கர் பற்றிய கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக அவரது ஒரே ஒரு உரையாடல் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சாம் C.S., "ஒரு மியூசிக் டைரக்டர் ஹிட் கொடுத்தாலே பல வாய்ப்புகள் வரும். ஆனால் என்னை வைத்து சிலர் வாய்ப்பு கிடைக்கலைன்னு போட்டோ போட்டு மீம்ஸ் போடுறாங்க. சில மீம்ஸ்ல சாய் அபயங்கருடன் என்னை கம்பேர் பண்ணி, அவர் ஒவ்வொரு ரீல்ஸ் மூலமும் ட்ரெண்ட் ஆகுறாரே, சாம் மட்டும் எங்க போனார்னு போட்டாங்க." என்றார்.


மேலும், "சாம், நீயே உனக்கே பி.ஆர் பண்ணுறீயா? இந்த மீம்ஸெல்லாம் உனக்காக நீயே பரப்புற மாதிரி இருக்கு! என ஒரு தயாரிப்பாளர் கேட்டிருந்தார். வெளிப்படையாக சொல்லணும் என்றால் சாய் அபயங்கருக்கு திறமை இருக்கு. சாம் தான் அந்த மாதிரி கம்பேர் பண்ணி மீம்ஸ் எல்லாம் போட சொன்னார் என்று யாராவது ஒருத்தர் மீடியாவில சொன்னால் நான் மியூசிக் பண்ணுறதையே நிறுத்துறேன்...!" எனவும் தெரிவித்தார்.  இந்த கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement