• Nov 23 2025

அவங்க என்னை விட்டிட்டு போனது தான் தாங்க முடில- ரச்சிதா குறித்து ஓபனாகப் பேசிய தினேஷ்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், இதுவரை போட்டியாளர்கள் யாரும் எதிர்பாராத பல டாஸ்குகளை கொடுத்து ஷாக் கொடுத்து வருகிறார் பிக்பாஸ். அந்த வகையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் பூகம்பம் டாஸ்க் நடந்து வருகிறது.

இந்த டாஸ்கில் தோற்றால், இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்துள்ள போட்டியாளர்களின் மூன்று பேர் வெளியேற்றப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு பதிலாக ஏற்கனவே நாமினேட் செய்யப்பட்டு வெளியேறிய மூன்று போட்டியாளர்கள் உள்ளே வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் ஹவுஸ்மேட்ஸ் கவனமாக விளையாடி வருகின்றனர்.இதை தொடர்ந்து, போட்டியாளர்கள் தங்களின் வாழ்க்கையில் நடந்த பூகம்பம் குறித்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதனால் ஹவுஸ்மேட்ஸ் தங்களுடைய அனுபவங்கள் குறித்து பேசி வருகின்றனர். 

எனவே இதில் தினேஷ் தன்னுடைய திருமண வாழ்வைக் குறித்து கூறியுள்ளார். அதாவது என் வாழ்க்கையில் பெரிய கவலை என்றால் என் மனைவியை விடடுப் பிரிந்தது தான் சின்ன ஒரு ஈகோ பிரச்சினையில் தொடங்கி யாராலும் தீர்த்து வைக்க முடியாத அளவுக்கு வளர்ந்த பொய் நிற்கின்றது. எனக்கு இருக்கும் கவலை போல அவங்களுக்கும் இருக்கும்.

இரண்டு பேசும் ஆடிஸ்ட் இது தான் எங்களுடைய அடையாளம். அவங்க விட்டுப் போனது என்னில் பாதி இல்லாமல் போன மாதிரி இருக்கு வாழ்க்கை எதை நோக்கி போய்க்கிட்டு இருக்கு என்று தெரில, ஆனால் சீக்கிரமாவே நான் நல்ல செய்தி சொல்லுவேன் என்று தெரிவித்துள்ளார் என்பது் குறிப்பிடத்தக்கது



Advertisement

Advertisement