• Jan 18 2025

ஹீரோவான பிக் பாஸ் சிபி... திரைப்படம் தொடர்பான நியூ அப்டேட் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற பலரும் சினிமாவில் நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் சிபி ஏற்கனவே குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடித்த 'வஞ்சகர் உலகம்' படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்திருந்தார். 'மாஸ்டர்' படத்தில் விஜய்யின் மாணவர்களில் ஒருவராக நடித்து ரசிகைகளிடத்தில் கவனம் ஈர்க்கப்பட்டார். 


தற்போது புதிய படம் ஒன்றில் நாயகனாக நடிக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை கிரவுன் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எம்.இப்ராஹிம் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் பிரகாஷ் கிருஷ்ணன் இயக்குகிறார். 

சிபியுடன் குஷிதா கல்லப்பு, பருத்திவீரன் சரவணன், ஜெயபிரகாஷ் மற்றும் நிரோஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். பாபு தமிழ் வசனம் எழுத, கோபி கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். கேபர் வாசுகி இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.


Advertisement

Advertisement