• May 02 2024

விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்... தளபதி 68 First லுக் ரிலீஸ் திகதி அறிவிப்பு...

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படம் தளபதி 68. இந்த திரைப்படம் தொடர்பான உப்பிடாதேக்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். தற்போது சூப்பரான நியூஸ் ஒன்று கிடைக்க பெற்றுள்ளது.


பல வருடங்களாக வெங்கட் பிரபு மற்றும் விஜய் எப்போது இணைவார்கள் என விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தனர். தற்போது அந்த நல்ல விடையம் நடைபெற்றுள்ளது. ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் என அறிவிப்பு வெளிவந்த நாளில் இருந்து விஜய் ரசிகர்கள் சும்மா வெறித்தனமா இப்படத்திற்காக காத்துகொண்டு இருக்கிறார்கள்.


இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி பல நாட்களாகியுள்ள நிலையில், தற்போது சென்னையில் விறுவிறுப்பாக சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, ஜெயராம், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு மற்றும் வெங்கட் பிரபு கேங் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.


இந்நிலையில் தளபதி 68 குறித்து வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் தளபதி 68 First லுக் வருகிற டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகிறது என தெரியவந்துள்ளது.


புத்தாண்டை ரசிகர்கள் விஜய் பிரஸ்ட் லுக் ஓடு கொண்டாட காத்துக்கொண்டிருக்கிறார். இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement