• Oct 13 2024

GOAT படம் எப்படி இருக்கு? முழு படத்தையும் பார்த்தவரின் முதல் விமர்சனம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படும் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

கோட் திரைப்படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கேரக்டரில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் இந்த படத்தில் பிரபல நடிகர்களான பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன் உட்பட பலர்  நடிப்பதனால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக காணப்படுகின்றது.

இதுவரை மூன்று பாடல்கள் கோட் படத்திலிருந்து வெளியானது. ஆனாலும் அவை பெரிதளவில் வரவேற்பு பெறவில்லை அவற்றுள் விஜய் - சினேகா காம்போவில் வெளியான மெலோடி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு பவதாரணியின் குரல் பயன்படுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து கோட் திரைப்படத்திலிருந்து ட்டெய்லர் வெளியானது. இது ஒட்டுமொத்த நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காணப்பட்டது. ட்டெய்லரை பார்த்த ரசிகர்களுக்கு படம் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே காணப்படுகிறது.


மேலும் கோட் படத்தின் ரன்னர் டைம் 3 மணி நேர 3 நிமிடங்கள் மற்றும் 14 நொடிகள் என தகவல் வந்திருப்பதால் இந்த படம் இவ்வளவு நீளமா என பலரும் பேச தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், GOAT முழு படத்தையும் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் அளித்த விமர்சனம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி அவர்கள் கூறுகையில், கோட்  படம் மூன்று மணி நேரம் என்றாலும் படம் பார்த்ததே தெரியவில்லை என தமது பாசிட்டிவ்  விமர்சனங்களை அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Advertisement