• Feb 05 2025

எந்த தைரியத்தில் பாகுபலி ரேஞ்சுக்கு ரிஸ்க் எடுக்கிறார் சிம்பு? விளக்கம் சொன்ன பிரபலம்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகர் சிலம்பரசன். இதனால் இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகி இருந்தன.

அதில் சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளார். குறித்த படத்தில் சிம்பு மாணவனாக நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பும் வெளியானது. இதனால் மீண்டும் ஒரு வல்லவனா? என சிம்புவின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

அதன் பின்பு சிம்புவின் ஐம்பதாவது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாகவும் அந்த படம் சரித்திர கதை களத்தில் உருவாக உள்ளதாகவும் சிறப்பு போஸ்டர் வெளியானது. பாகுபலி ரேஞ்சுக்கு காணப்பட்ட குறித்த போஸ்டர் சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 


அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை தானே தயாரிக்க இருப்பதாகவும் சிம்பு தெரிவித்திருந்தார். மேலும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா சிம்புவுடன் கூட்டணி வைத்துள்ளார். அவர் இந்த கதையை கேட்டதுமே தனக்கும் எதிர்பார்ப்பு பெரிய அளவில் வந்ததாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வலைப்பேச்சு அந்தணன் சிம்புவின் ஐம்பதாவது படம் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ளது என்பதோடு அந்த படத்தை சிம்புவே தயாரிக்க உள்ளதாகவும், எதற்காக இப்படியான ரிஸ்க்கை சிம்பு எடுக்கிறார் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.


அதாவது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள சிம்புவின் ஐம்பதாவது படம் சரித்திர கதையாக எடுக்கப்பட்ட உள்ளது. இந்த படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டுள்ளது. 

மிகப்பெரிய நடிகர்களின் படங்களுக்கு தான் இவ்வாறான பட்ஜெட் போடப்படும். ஆனால் தற்போது வளர்ந்து வரும் நடிகராக காணப்படும் சிம்புவுக்கு இப்படி பெரிய பட்ஜெட் போட்டது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது.

ஆனாலும் அவர் இந்த படத்தை தானே தயார் இருப்பதாக கூறியதற்கு காரணம் அவருடைய அப்பா தான். அவருடைய அப்பாவுக்கு நிறைய தயாரிப்பு நிறுவனங்களைத் தெரியும். படத்திற்கான சூட்டிங்,  செட் அமைப்பு என்பவற்றை டி.ஆர். ராஜேந்திரன் இலவசமாகவே பெற்றுக் கொடுப்பார் என்ற தைரியத்தில் தான் சிம்பு துணிந்து இறங்கியதாக வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement