• Jan 19 2025

22 வயது நடிகையுடன் குத்தாட்டம் ஆடிய நடிகர் சிவா... இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ...

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் எஸ்கே 23 என இரு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஒரு நிகழ்ச்சியில் இளம் நடிகையுடன் ஆடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 


ராஜகுமாரி பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. அமரன் மற்றும் எஸ்கே 23 ஆகிய இரண்டு திரைப்படங்களும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.


சமீபத்தில் அமரன் படத்தின் டீசர் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ராணுவ வீரராக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அந்த நிகழ்வில் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்துகொண்டுள்ளனர். இதில், தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் சென்சேஷனல் நாயகி ஸ்ரீலீலாவுடன் சிவகார்த்திகேயன் குத்தாட்டம் ஆடியுள்ளார். அதுவும் தெலுங்கில் படுவைரலான 'குர்ச்சி மடத்தபெட்டி' பாடலுக்கு ஸ்ரீலீலாவுடன் மேடையில் நடனமாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..


Advertisement

Advertisement