• Jan 18 2025

நடன புயல் பிரபு தேவாவின் சொத்து மதிப்பு! முழு விபரம் இதோ!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

நடன இயக்குனர் சுந்தரத்தின் மகனான பிரபுதேவா, சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். இதனால் தந்தையை போல் சினிமாவில் சாதிக்க நினைத்த பிரபுதேவா தன்னுடைய நடனத்திறமையை வெளிப்படுத்தி பேமஸ் ஆனார்.


நடனத்தை தொடர்ந்து நடிப்பில் மீது ஆர்வம் கொண்டிருந்த பிரபுதேவா கடந்த 1994-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்து என்கிற படம் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த காதலன் படம் ரிலீஸ் ஆகி வேறலெவல் ஹிட்டானது. பிரபுதேவா ஆடிய நடனம் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆகின.

சுமார் 10 ஆண்டுகள் பிசியான ஹீரோவாக வலம் வந்தார் பிரபுதேவா. 2007-ம் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து இவர்கள் காம்போவில் வில்லு படம் உருவானது. ஆனால் போக்கிரியை போல் வில்லு படம் ரசிகர்களை கவர தவறியதால் பிளாப் ஆனது.


சினிமாவில் சக்சஸ்புல்லாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ளார் பிரபுதேவா. கடந்த 1995-ம் ஆண்டு ரம்லத் என்பவரை திருமணம் செய்துகொண்ட பிரபுதேவாவுக்கு இரண்டு மகன்களும் பிறந்தனர். அதில் ஒருவர் மரணமடைந்துவிட்டார். மகனின் மரணத்துக்கு பின்னர் தன்னுடைய முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்துவிட்டார் பிரபுதேவா.


சினிமாவில் இயக்குனர், நடிகர், டான்ஸ் மாஸ்டர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஜொலித்து வருகிறார் பிரபுதேவா.இதுதவிர சிங்கப்பூரில் இவருக்கு சொந்தமாக டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றும் உள்ளது. அதன்படி அவரின் சொத்து மதிப்பு ரூ.140 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. பிரபுதேவாவுக்கு சொந்தமாக சென்னை மற்றும் மும்பையில் சொகுசு வீடுகளும் உள்ளதாம். இதுதவிர இவரிடம் ஏராளமான காஸ்ட்லி கார்களும் உள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement