• Jan 19 2025

நடிகர் சூர்யா வெளியிட்ட உணர்ச்சிபூர்வ பதிவு... சூர்யா 44 ஷூட்டிங் நிறைவு... வைரல் டுவிட் இதோ...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

கங்குவா படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு நடிகர் சூர்யா அவரது அடுத்த படமான சூர்யா 44ல் நடித்து வருகிறார். அந்த படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்குகிறார். கங்குவா படம் வரும் நவம்பர் 14 - ம் தேதி ரிலீஸ் ஆகா இருக்கிறது.


தனது 44வது படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய சூர்யா திட்டமிட்டு இருக்கிறார் என கூறப்படுகிறது. சூர்யாவின் சினிமா கரியரிலேயே கங்குவா படத்துக்கான பட்ஜெட் அதிகம் என்பதால் இந்த படத்தின் மேல் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 


சூர்யா அவரது 44 - வது படத்தில் நடித்து கொண்டிருந்த நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டதாக கூறி படப்பிடிப்பு தளத்தில் நடந்தவற்றை குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார். 


அதில், "அற்புதமான திறமையான படக்குழுவினருடன் ஏராளமான நினைவுகள் எனக்கு கிடைத்திருக்கின்றன. அதுமட்டுமில்லாமல், இந்த படம் மூலம் வாழ்நாள் முழுவதும் கார்த்திக் சுப்புராஜ் எனது சகோதரனாக உருவாகியுள்ளார். இதுபோன்ற மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்ததற்கு படக்குழு மற்றும் இயக்குனருக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.    





Advertisement

Advertisement