• Jan 18 2025

இன்னும் நிறைய காமெடியுடன் மீண்டும் சந்தானம்... 'டிடி ரிட்டர்ன்ஸ் 2' movie அப்டேட்...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

"வடக்குப்பட்டி ராமசாமி', 'இங்க நான்தான் கிங்கு' படங்களை அடுத்து ஹாரர் காமெடியில் களம் இறங்கியிருக்கிறார் நடிகர் சந்தானம். கடந்த 2023ம் அவர் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டர்ன்ஸ்' அதிரி புதிரி வெற்றியாக அமைந்ததினால், இப்போது அதன் இரண்டாம் பாகம் ரெடியாகி வருகிறது.


சந்தானத்தைப் பொறுத்தவரை, 'தில்லுக்கு துட்டு', 'தில்லுக்கு துட்டு 2' மற்றும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய ஹாரர் காமெடிகள் அவருக்குப் பெரியளவில் கைகொடுத்து வருகின்றன. அவரது ஆடியன்ஸ் அவரிடம் ஹாரர் காமெடியை எதிர்பார்ப்பதால், 'டிடி ரிட்டர்ன்ஸ்' வெளியானதும், அதன் இரண்டாம் பாகும் எப்போது வரும் எனக் கேட்க தொடங்கிவிட்டனர். 'இங்க நான்தான் கிங்கு' படத்தை அடுத்து 'டி.டி.ரிட்டர்ன்ஸ் 2' வேலைகள் தொடங்கிவிட்டன. 


முதல் பாகத்தை இயக்கிய எஸ்.பிரேம் ஆனந்த்தான் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். 'சந்தானம் சாருக்கு காமெடி மட்டுமல்ல, கதை, திரைக்கதை பண்றதிலும் திறமையானவர். ஒரு வரி வசனம் கூட, அவர் கைப்பட்டதும் பல பரிமாணங்கள் எடுக்கும். அதிலிருந்து அவர் அலசி எடுத்து, இது ஒர்க் அவுட் ஆகும்னு அவர் கணிக்கிறது, சரியா இருக்கும்.'' என்கிறார் இயக்குநர் பிரேம் ஆனந்த்.


ஹீரோயின்களாக புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இப்போது பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. இம்மாதம் கடைசி வரை, அங்கே படப்பிடிப்பு நடைபெறும் என்றும், முதல் பாகத்தை விட, இதில் காமெடி டபுள் மடங்கு கேரன்டி என்றும் சொல்கிறார்கள். படத்தின் டைட்டிலை 'டிடி ரிட்டர்ன்ஸ் 2' என வைக்காமல், புது டைட்டிலை வைக்க ஆலோசித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement