• Oct 31 2024

ஷாலினி ஜோயா வெளியிட்ட தீபாவளி ஸ்பெஷலை பார்த்தீர்களா? குவியும் லைக்ஸ்

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 5ல் பங்கு பற்றி இளம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான்  ஷாலினி ஜோயா. இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றியதன் பின்னர் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்பட்டார்கள்.

இவர் ஒரு சில ஷார்ட் பிலிம்ஸ்களை இயக்கி உள்ளதோடு டான்சராகவும் நடிகையாகவும் காணப்படுகின்றார். அது மட்டும் இன்றி பல சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரது சமையல் மட்டும் அல்லாமல் இவர் பேசும் தமிழும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் ஒரு சில சமயங்களில் இவர் ஏனையவர்களை மதிக்காமல் கதைப்பதும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.


இதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனார். தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் விதம் விதமாக போட்டோ ஷூட் செய்து வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்றைய தினம் தீபாவளி திருநாளை முன்னிட்டு ஷாலினி ஜோயா அழகிய ஆடையில் போட்டோ ஷூட் செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தீபாவளி வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.


Advertisement

Advertisement