• Nov 24 2025

தெறிக்க இருக்கும் தியேட்டர்கள்! அனலாய் வந்த புஷ்பா 2 அப்டேட்!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பெரிய அளவு ஹிட்டான திரைப்படம் புஷ்பா. இதன் படம் 2 தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.  புஷ்பா முதல் பாகம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையை தாறுமாறாக செய்தது. தற்போது 2ம் பாகம் படு மாஸாக தயாராக வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.


படத்தின் வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டு வரும் நிலையில் புஷ்பா 2 படத்தின் ஒரு சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீபாவளி முன்னிட்டு போஸ்டர் ஒன்றும் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் புஷ்பா 2படக்குழு கலந்து கொண்டுஇருந்தது. 


சுமார் 11,500 தியேட்டர்களில் புஷ்பா 2 படத்தை திரையிடுவதற்கான வேலைகள் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். இந்தியாவில் 6500 தியேட்டர்கள், வெளிநாடுகளில் 3000 இடங்களில் 5000 தியேட்டர்களில் திரையிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் மிக ஆர்வமாக இந்த செய்தியை ஷேர் செய்து வருகிறார்கள்.  

Advertisement

Advertisement