தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் ஹிட் கொடுத்ததால் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்ததோடு முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ், விஷால், சிம்பு, சிவகார்த்திகேயன், கார்த்தி என பல டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
ஒரு கட்டத்தில் ஹன்சிகாவுக்கு உடல் எடை அதிகரிக்க அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கியது. எனினும் அவர் தனது கடின முயற்சியினால் உடல் மெலிந்த போதும் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து தனது ரூட்டை மாற்றிக் கொண்ட ஹன்சிகா திருமணம் செய்ய தயாரானார். அதன்படி இவர்களுடைய திருமணம் ராஜஸ்தானில் உள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஹன்சிகாவின் கணவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர்.
திருமணத்திற்கு பிறகும் ஹன்சிகா ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் அதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இறுதியில் இவர்களுடைய திருமண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்தது. தற்போது ஹன்சிகாவின் திருமண வாழ்க்கை பற்றிய பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.
இந்த நிலையில் ஹன்சிகா இன்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாள் அன்று ஒரு குழந்தையை தத்தெடுப்பது வழக்கம். எனவே இன்றைய பிறந்த நாளில் அவர் என்ன என்ன சுவாரசிய சம்பவங்கள் செய்யப் போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தற்போது அவருக்கு பலரும் தமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!