• Jan 18 2025

சூப்பர் ஸ்டாருடன் பேச வாய்ப்பு கிடைத்தது! கமல்ஹாசனை சூப்பர்ஸ்டார் என கூறிய மலேசிய பிரதமர்!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களாக இருப்பவர்கள் தமிழ் நாட்டில் கொண்டாடப்படாவிட்டாலும் உலக அளவில் பிரபலமாக உள்ளனர். அவ்வாறே சமீபத்தில் மலேசிய பிரதமர் கமல்ஹாஸனை சந்தித்ததை மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கமல்ஹாசன் ஆவார். ரசிகர்களால் ஆண்டவர் மற்றும் உலகநாயகன் என அழைக்கப்படும் இவர் சமீபத்தில் இந்தியன் 2 ப்ரோமோஷனுக்காக மலேசியா சென்றுள்ளார்.


அங்கு சென்ற அவர் மலேசிய பிரதமரையும் சந்தித்து அவருடன் கலந்துரையாடியுள்ளார். இதனை மலேசிய பிரதமர் தனது X தள பக்கத்தில் பதிவிட்டு "அதிகாரப்பூர்வ பணிகளுக்கு இடையில், இந்தியாவின் பிரபல கலைஞரும் 'சூப்பர் ஸ்டாருமான' கமல்ஹாசனுடன் நேரத்தை செலவிட எனக்கு நேரம் கிடைத்தது. ஊழலுக்கு எதிரான கண்டிப்பு உள்ளிட்ட திரையுலகம் தொடர்பான கருத்துக்களைப் பேசவும் பரிமாறிக்கொள்ளவும் 30 நிமிட வாய்ப்பு பயன்படுத்தப்பட்டது" என கூறியுள்ளார். இவ்வாறு கமலை சூப்பர்ஸ்டார் என கூறியதை ரஜனி ரசிகர்கள் கண்டித்தும் வருகின்றனர்.


Advertisement

Advertisement