• Jul 06 2025

நாளை ’விடாமுயற்சி’ அப்டேட்.. சுரேஷ் சந்திரா தெரிவித்த சூப்பர் தகவல்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் நாளை இரவு 7.03 மணிக்கு வெளியாகும் என்று சற்றுமுன் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளதையடுத்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

’விடாமுயற்சி’ படத்தின் அறிவிப்பு வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பும் கடந்த சில மாதங்களாக நடைபெறவில்லை. மேலும் இந்த படத்தின் எந்த அப்டேட்டும் வராமல் இருந்ததால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில் தான் அஜித் அதிரடியாக ’குட் பேட் அக்லி’ படத்தை ஆரம்பித்தார் என்பதும் அந்த படத்தின் அப்டேட்டுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது அஜர்பைஜான் நாட்டில் ’விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அதில் அஜித் உட்பட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நாளை இரவு 7.03  மணிக்கு ’விடாமுயற்சி’ படத்தின் முக்கிய அப்டேட்டை லைகா நிறுவனம் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அநேகமாக ஃபர்ஸ்ட் சிங்கிள் அல்லது டீசர் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.


Advertisement

Advertisement