• Jan 19 2025

பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு கிடைத்த ஏமாற்றம்! சற்றும் எதிர் பார்க்காத ஈஸ்வரி!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ஈஸ்வரிக்கு போன் பண்ணிய கோபி, இன்றைக்கு செப் லீவு என்ன பண்ணுறது எனக்கு தெரியல, பிரச்சனைல மாட்டிக்கிட்டு இருக்கன். நீங்க தான் சூப்பரா சமைப்பீங்களே கொஞ்சம் ஏதாவது பண்ணுங்க என ஈஸ்வரிடம் உதவி கேட்கிறார்.

ஈஸ்வரியும் உடனே கோபியின் ரெஸ்டாரண்டுக்கு கிளம்பிச் சென்று அங்கு மெனுவை கேட்டதும் அதிர்ச்சி அடைகிறார். மேலும் 100, 200  பேருக்கு எல்லாம் என்னால சமைக்க முடியாது. ஆனாலும் பாக்கியாவிடம் ஓடர் கொடுக்கலாமென்று ஐடியா போடுகிறார்.

கோபிக்கு தெரியாமல் பாக்கியாவுக்கு கேடரிங் ஆர்டர் கொடுக்கிறார். ஒரு மணி நேரத்தில் சாப்பாடு வேணும் என சொல்ல, பாக்கியா நேரம் காணாது என தயங்குகிறார். ஆனாலும் ஈஸ்வரி கம்பெல் பண்ண சம்மதிக்கிறார். மேலும் நீ சமைச்சு முடிச்சுட்டு சொல்லு, நான் ஆளை அனுப்பி வைக்கிறேன் என  ஈஸ்வரி சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து கோபி ஆபீஸ் ரிசப்ஷனில் இருக்கும் பெண்ணிடம் பாக்கியா நம்பரை கொடுத்து அவருக்கு மெனுவை  அனுப்பி வைக்குமாறு சொல்ல, அவர் மெனுவோடு சேர்த்து லொகேஷனையும் அனுப்பி வைக்கிறார்.

இதையடுத்து, சமையல் முடிந்ததும் ஈஸ்வரிக்கு போன் பண்ண அவர் போன் எடுக்கவில்லை. இதனால் ரிஷப்ஷன் பெண்ணுக்கு  போன் பண்ணி கேட்க, அவரும் டெலிவரி பண்ணி விடுமாறு சொல்ல, பாக்கியா எல்லாத்தையும் ஏற்றி அனுப்பி விட்டு பின்னாடி ஆட்டோவில் வருகிறார்.

அதன் பின்பு ஈஸ்வரி போனில் சார்ஜ் போட்டுவிட்டு தனியாக பாக்கியாவுக்கு ஃபோன் பண்ணி இன்னும் பத்து நிமிஷம் மட்டும் என்று சொல்லி, இன்னொரு பக்கம் டெலிவரி பாய்களை கூப்பிட்டு வேனை ரெடி பண்ணுமாறு சொல்கிறார்.


அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக சாப்பாடு வந்து நிற்க, சாப்பாடு வந்துருச்சு என்ன சந்தோஷப்படுகின்றனர். ஆனால்  பின்னாடியே பாக்கியா வந்து இறங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

அங்கு வந்த பாக்கியா, என்ன அத்தை பங்க்ஷன் என்று தானே சொன்னீங்க லோகேஷன் எதுவும் மாத்தி அனுப்பிட்டீங்களா? எங்க டெலிவரி பண்ணனும்னு சொல்லுங்க டெலிவரி பண்ணிடலாம் என சொல்ல, அங்கு இருந்தவர்கள் சரியான அட்ரஸ்க்கு தான் வந்திருக்கீங்க. இன்டைக்கு செப் லீவு. அதனால தான் உங்ககிட்ட கொடுத்தோம் என உண்மையை உடைக்கின்றனர்.

அதன் பின்பு பாக்கியா வெளியில் வந்து சாப்பாட்டை எடுத்துக்கொண்டு இருக்க, அங்கு வந்த கோபி ஏன் இவகிட்ட   சொன்னிங்க என்று புலம்ப, நான் ஆள் வச்சி எடுத்து  ஆள் வச்சு எடுத்துட்டு வந்துடலாம் தான் நினைச்சேன் ஆனா இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கல என்று ஈஸ்வரி பதில் சொல்ல, நீங்க ஒன்னு நினைச்சீங்க ஆனா கடவுள் எல்லாத்தையும் தெரியப்படுத்திட்டாரு என்று கோபிக்கு பல்பு கொடுக்கிறார் பாக்கியா.  இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement