• Jan 19 2025

அஜித்தை குறை சொல்வதே இந்தாளுக்கு வேலையா போச்சு.. அந்தணனை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

அஜித்தை குறை சொல்லி பத்திரிகையாளர் அந்தணன் ஒரு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அஜித்தை குறை சொல்வதே இந்த ஆளுக்கு வேலையாக போச்சு என்று ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பத்திரிகையாளர் அந்தணன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ’விடாமுயற்சி’ படத்தில் நேற்று வெளியான விபத்து குறித்த வீடியோவை கலாய்த்து உள்ளார். ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு எத்தனை மாதங்கள் நடந்துள்ள நிலையில் அதில் உள்ள ஏதாவது நல்ல ஸ்டில் அல்லது வீடியோவை எடுத்து போட்டு இருக்கலாம். அதற்கு பதிலாக ரசிகர்களிடம் இருந்து சிம்பத்தி தேடும் வகையில் விபத்து நடந்த வீடியோவை போட்டு வருகிறார்கள் என்றும் பிரியாணி செய்வது அல்லது காயமடைவது இந்த இரண்டை விட்டால் வேறு எதுவுமே அஜித் குழுவினருக்கு தெரியாதா என்று அந்தணன் கேள்வி எழுப்பி உள்ளார்.


அந்தணனின் இந்த வீடியோவுக்கு அஜித் ரசிகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஒரு நடிகர் தங்களது ரசிகர்களுக்காக எந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடிக்கிறார்? எவ்வளவு பெரிய விபத்துக்கள் வந்தாலும் அந்த விபத்தை பார்த்து பயப்படாமல் ஒரு காட்சி உண்மை தரத்துடன் வரவேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு நடிப்பது உள்ளதை தான் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சிம்பத்தி தேடும் அளவுக்கு அஜித்துக்கு அவசியமில்லை என்றும் ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

விஜய்யின் ஆதரவாளராக நீங்கள் அவர் கொடுக்கும் மோதிரத்திற்காக தேவையில்லாமல் அஜித்தை விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு என்ன வேண்டும்? எதை எப்போது கொடுக்க வேண்டும் என்று அஜித்துக்கு தெரியும் என்றும், பிறரை குறை சொல்வதை விட்டுவிட்டு பாசிட்டிவ்வை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.


Advertisement

Advertisement