பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, கோபி சுதாகரைப் பாத்து பாக்கியாவோட அடுத்த ரெஸ்டாரெண்டையும் நீங்க வாங்கிட்டீங்களா என்று கேக்கிறார். அதுக்கு சுதாகர் நான் அப்படி எல்லாம் எந்த ரெஸ்டாரெண்டையும் வாங்கல என்று சொல்லுறார். மேலும் சம்மந்தியோட முதலாவது ரெஸ்டாரெண்ட் எங்க இருக்கு என்றே எனக்குத் தெரியாது என்கிறார். அதைக் கேட்ட கோபி பாக்கியா உங்கள ரெஸ்டாரெண்டுக்கு முன்னாடி பார்த்தது என்று சொன்னால் அதுதான் கேட்டனான் என்கிறார்.
இதனைத் தொடர்ந்து சுதாகர் தான் பாக்கியாவப் பார்த்தே ரொம்ப நாள் ஆகுது என்று சொல்லுறார். மேலும் இது ஒரு பக்கம் வேடிக்கையாவும் இருக்கு விதோனமாவும் இருக்கு என்கிறார். அதைத் தொடர்ந்து கோபியப் பாத்து சுதாகர் நீங்க ரெண்டு கல்யாணம் பண்ணி அதில ஒன்று இல்லாமல் போனாலும் உங்களுக்கு முதல் மனைவில இருக்கிற பாசம் கொஞ்சம் கூட குறையல என்று சொல்லுறார்.
அதனை அடுத்து செல்வி பாக்கியாவப் பாத்து உண்மையிலேயே இனியாவோட மாமனார் தான் அந்த ரெஸ்டாரெண்ட வாங்கியிருக்கிறாரோ என்று கேக்கிறார். அதுக்கு பாக்கியா ஆமா செல்வி நான் என்ன பொய்யா சொல்லுறன் என்று கேக்கிறார். மேலும் சுதாகர் மாத்தி மாத்தி கதைக்கிறார் என்று கோபமாகச் சொல்லுறார்.
இதனை அடுத்து சுதாகர் அந்த ரெஸ்டாரெண்ட வாங்கிட்டார் என்ற விஷயத்தில கோபி சந்தேகப்படுறார். பின் கோபி வீட்ட வந்து பாக்கியாவப் பாத்து உன்னோட ரெஸ்டாரெண்ட வாங்கினது சுதாகர் இல்ல என்று சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா இனிமேலும் என்னால நிரூபிக்க முடியாது என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!