தமிழ் சினிமாவில் இன்று ரசிகர்களால் பேசப்படும் படங்களில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ள படம் தான் “லெவன்”. புதுமையான கதைக்கரு, புதுமுக இயக்குநர், வித்தியாசமான டீசர்கள் என அனைத்தும் இணைந்து ரசிகர்களின் காத்திருப்புக்கு உருவாக்கியிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகுந்த கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை அபிராமி, ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தும் வகையிலும் தனது உணர்வுகளைப் பகிர்ந்திருந்தார். நடிகை அபிராமி தனது திரையுலகப் பயணத்தை தொடர்ந்து பல ஆண்டுகளாக மேற்கொண்டு சிறந்த நடிகைகளில் ஒருவராக இருக்கின்றார். அவருடைய நடிப்புத் திறன் , பேசும் முறை மற்றும் தோற்றம் என அனைத்தும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கின்றது.
இப்பொழுது “லெவன்” படத்தில் அவருக்கு முக்கியமான ஒரு வேடம் கிடைத்திருப்பது, அவருக்கு மீண்டும் ஒரு சிறப்பான வாய்ப்பாகவே பார்க்கப்படுகின்றது. நேர்காணல் ஒன்றில் கதைக்கும் போது, “இது ஒரு வித்தியாசமான அனுபவம். இந்தப் படத்துல நடித்தது எனக்கு ரொம்பவே சந்தோஷம். ஆனா இப்போ இதைப்பத்தி எதுவும் சொல்ல மாட்டேன்.சொன்னா என்ன உதைப்பாங்க!” என்று கலகலப்பாக தெரிவித்திருந்தார்.
இந் நிகழ்வில் படத்தின் இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் முக்கிய நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த இசை வெளியீட்டு விழா "லெவன்" படத்தின் நம்பிக்கையை உருவாகியுள்ளது.
Listen News!